Dr.Suresh Cosmetic Surgery

லிப்போஷன் (LIPPOSUCTION) – செய்முறை தகவல்

லிப்போஷன் என்பது மனித உடலின் வெவ்வேறு இடங்களில் உள்ள அதிகபடியான கொழுப்புகளை சிறிய தலை மூலம் உறிஞ்சி எடுப்பதாகும்.

இது மனித உடலின் உருவ அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு அழகு சிகிச்சையே தவிர உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை அல்ல.

உடலில் உள்ள எந்த பகுதியில் (கழுத்து,மார்பு, வயிறு, தொடைகள், பிட்டம், முதுகு, கை) இருக்கும் அதிகபடியான கொழுப்பையும் இந்த லிபோஷன் முறையில் உறிஞ்சி சரி செய்ய முடியும். இந்த லிபோஷன் முதன் முதலில் பிரான்சு நாட்டை சேர்ந்த Dr. Charles Dvgarier என்பவரால் கண்டறியப்பட்டது.

செய்முறை:

Patiant-ன் உடல்நிலை லிபோஷன் செய்யும் மருத்துவர், மற்றும் மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் அகியோரால் முதலில் பரிசோதிக்கப்படும். அவர் இந்த லிபோஷன் சிகிச்சைக்கு தயாரானவரா என்பது கண்டறியப்படும். முதலில் லிபோஷன் செய்யும் இடம் mark செய்யப்படும். பிறகு சிறிய ௦.5 cm துளைகொண்டு Tumuscert Solution என்ற திரவம் செலுத்தப்படும். பிறகு, கொழுப்பு கரைக்கப்பட்டு ஒரு சிறிய குழாய் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும், அருகில் உள்ள ரத்த நாளங்கள் மற்றும் Nerres (நரம்புகள்) சேதம் ஆகாதவாறு லிபோஷன் செய்யப்படும். சிகிச்சையின்போது Patient-ன் திரவநிலை (Fluid balarace) பாதிப்பு அடையாதவாறு பார்த்துக்கொள்ளப்படும்.

மயக்கமருந்து: இது எந்த இடத்தில் லிபோஷன் செய்ய வேண்டுமோ அதற்கு ஏற்றவாறு கொடுக்கப்படும்.

வகைகள்:

இந்த அனைத்து விதமான செய்முறையிலும், கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படுகிறது. Ultra sound மற்றும் POWER லிபோஷன் முறையில் முறையில் அதகபடியான கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படும்.

தேவையான அளவு கொழுப்பு உறிஞ்சி எடுக்கபட்டபின், அந்த ௦.5cm துளை தையல் இட்டு சரி செய்யபடுகிறது.

ஓய்வு:

லிபோஷன் செய்தபிறகு, சாதரணமாக ஓன்று அல்லது இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தால் போதுமானது. பிறகு அவர்கள் தங்களது ROUTINE வேலைக்கு செல்ல முடியும். Large volume Liposuction(5-10 liters) (நிறைய கொழுப்பு, நிறைய பகுதிகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்பட்டவர்கள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை ஓய்வு எடுக்கவேண்டும்.

பின்விளைவுகள்:

இந்த லிபோசஷன், 6 மாதத்திற்கு பிறகு தேவையென்றால் உடலில் உள்ள வேறு பகுதிக்கு மீண்டும் செய்துகொள்ளலாம்.